இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சதொச மூலம் பொருட்கள் விலை நிவாரணம்

படம்
 இலங்கை சதொச மூலம் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது குறிபிட்ட சில பொருட்கள் விலை குறைந்துள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்த சிவப்பு அரிசி 1kg-ரு 10 ஆல் புதிய விலை 185 இறக்குமதி செய்த நாடு அரிசி 1kg-ரு 4 ஆல் புதிய விலை 194 பருப்பு 1kg-ரூ 31 ஆல் புதிய விலை 429 வெள்ளை சீனி 1kg - ரூ 19 ஆல் புதிய விலை 279 நெத்திலி 1kg - ரூ 25 ஆல் புதிய விலை 1352 தோட்ட புறங்களில் கோதுமை மா 1kg ரூ 310 க்கு பெற முடியும் என தெரிவி்த்துள்ளது.

இலங்கை இறுதி போட்டியில்

படம்
 ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை இந்திய அணியை வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்று கொண்டது.. அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா 72 ஓட்டங்களை பெற்று கொண்டார். S. யாதவ் 34 பண்ட், பாண்டியா 17 ஓட்டங்கள் வீதம் பெற மற்றைய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.  மதுசங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை மென்டிஸ் மற்றும் பெத்தும் ஜோடி வழங்கியது.. முறையே 57,52 ஓட்டங்களை அவர்கள் பெற்றனர். இடையில் சற்று தடுமாறிய நிலையில் இருந்த இலங்கை அணியை தலைவர்  தசுன் மற்றும் ராஜபக்சே ஜோடி வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றார்கள். தசுன் 33 ராஜபக்சே 25 ஆட்டம் இழக்காமல் 5 வது விக்கெட் இணைப்புக்கு 64 ஓட்டங்களை சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர்.  செஹல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்..