இடுகைகள்

சதொச மூலம் பொருட்கள் விலை நிவாரணம்

படம்
 இலங்கை சதொச மூலம் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது குறிபிட்ட சில பொருட்கள் விலை குறைந்துள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்த சிவப்பு அரிசி 1kg-ரு 10 ஆல் புதிய விலை 185 இறக்குமதி செய்த நாடு அரிசி 1kg-ரு 4 ஆல் புதிய விலை 194 பருப்பு 1kg-ரூ 31 ஆல் புதிய விலை 429 வெள்ளை சீனி 1kg - ரூ 19 ஆல் புதிய விலை 279 நெத்திலி 1kg - ரூ 25 ஆல் புதிய விலை 1352 தோட்ட புறங்களில் கோதுமை மா 1kg ரூ 310 க்கு பெற முடியும் என தெரிவி்த்துள்ளது.

இலங்கை இறுதி போட்டியில்

படம்
 ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை இந்திய அணியை வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்று கொண்டது.. அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா 72 ஓட்டங்களை பெற்று கொண்டார். S. யாதவ் 34 பண்ட், பாண்டியா 17 ஓட்டங்கள் வீதம் பெற மற்றைய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.  மதுசங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை மென்டிஸ் மற்றும் பெத்தும் ஜோடி வழங்கியது.. முறையே 57,52 ஓட்டங்களை அவர்கள் பெற்றனர். இடையில் சற்று தடுமாறிய நிலையில் இருந்த இலங்கை அணியை தலைவர்  தசுன் மற்றும் ராஜபக்சே ஜோடி வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றார்கள். தசுன் 33 ராஜபக்சே 25 ஆட்டம் இழக்காமல் 5 வது விக்கெட் இணைப்புக்கு 64 ஓட்டங்களை சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர்.  செஹல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்..

தபால் கட்டணம் அதிகரிப்பு - குறைந்த கட்டணம் 50/=

படம்
தபால் கட்டணம் அதிகரிப்பதற்கான வர்தமானியை அமைச்சர் பந்துல குனவர்தன வெளியிட்டுள்ளார். அதற்கமைய இதுவரை 15/= ஆக இருந்த குறைந்த கட்டணம் 50/= ஆக அதிகரித்துள்ளது. வர்த்தமானி

மின் கட்டணம் 75% ஆல் உயர்வு

படம்
 நாளை (10) முதல் மின் கட்டணம் 75% ஆல் உயர்வடையும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது... தற்போது நடைபெறும் ஊடக சந்திப்பில் பொது பயன்பாட்டு ஆணையக தலைவர் ஜனக ரத்னாயக தெரிவித்தார்.... 

Litro Gas விலை குறைவு...

படம்
 12.5kg - 246/=       5kg-99/=    2.5kg- 45/=  ஆ‌கிய பெறுமதிகளில் விலை குறைவடையும் என litro gas நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். 

QR பதிவு முறை இடை நிறுத்தம்

படம்
  வரும் 48 மணி நேரத்திற்கு QR முறை மூலம் பதிவு செய்வதை இடை நிறுத்தம் செய்வதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர கூறியுள்ளார். மோட்டார் வாகன திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள சீர்திருத்தம் காரணமாக இவ்வாறு பதிவு செய்வதை இடை நிறுத்தம் செய்வதாக அமைச்சர் குறிப்பிட்டார். சீர்திருத்தம் நிறைவடைந்ததும் QR பதிவு தொடரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

கொவிட் 19, 8 மரணங்கள்

படம்
 கடந்த ஆகஸ்ட் 2ம் திகதி இலங்கையில் 8 பேர் கொவிட் 19 தொற்றால் மரணமடைந்துள்ளனர். அதே சமயம் 3ம் திகதி 122 கொவிட் 19 தொற்றாலர்கள் அடையாளம் காணபட்டுள்ளனர்.. அத்துடன் இலங்கையில் இதுவரை அடையாளம் கண்ட கொவிட் 19 தொற்றாலர்கள் எண்ணிக்கை 666,086ஆகவும் இறப்புக்களின் எண்ணிக்கை 16565 ஆகவும் உயர்வடைந்துள்ளது.